உடல்ஆரோக்கியம் பேணும் நெல்லிக்காய், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

04/10/2018

உடல்ஆரோக்கியம் பேணும் நெல்லிக்காய்,

நெல்லிக்காய்..!


மனிதனுக்கு எளிதாக கிடைக்குமாறு இயற்கை அளித்த அதிக மருத்துவ பலன்களை உள்ளடக்கிய ஓர் உணவு பொருள் தான் நெல்லிக்காய்.

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணமாக்க மிக முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

பல மருத்துவ குணங்கள் கொண்ட நெல்லிக்கனியை அமுதக்கனி என்றும் அழைக்கப்படுகிறது.

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, மற்றும் கார்போஹைட்ரேட், போன்றவைகள் அதிக அளவில் வளமாக உள்ளது.
நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமன்றி நம்முடைய சருமம், தலைக்கு என ஒட்டுமொத்த நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் அளிக்கின்றது.

உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சினையும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நெல்லிக்காயை ஜூஸ் செய்து தினமும் அதிகாலையில் குடித்து வாருங்கள்.

இதனால் இன்றைய தலைமுறையினர் அதிகம் சிரமப்படும் பல பிரச்சினைகளை தீர்க்க உதவியாக இருக்கும்.

தினமும் அதிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள மற்றும் பயன்கள்.

* நெல்லிக்காய் உடலில் புரதங்களின் அளவை அதிகரித்து கொழுப்புகளின் அளவை குறைத்து உடல் பருமன் ஆகுவதை தடுக்கும்.
* எலும்புகள் ஆரோக்கியமாகும்.
நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

* உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

* உடல் மற்றும் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

* இதிலுள்ள வைட்டமின் சி, சரும செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றது.

* புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது.

* நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.
நெல்லிக்காய் சாற்றில் தேன், மற்றும் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்து வர நீரிழிவு நோய்யை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

* அனைத்து வகை முடி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

* கண் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகள் நீக்க உதவியாக இருக்கும்.

* இரைப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்க உதவியாக இருக்கும்.

* உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். 
இருதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு இருந்தால் அவற்றை நீக்கி இருதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* கல்லீரல் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகள் நீங்க உதவியாக இருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சினைகளை குணமாக்க நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* தூக்கமின்மையைப் போக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் பெறலாம்.

* மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

* நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வர மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் நாள்பட்ட இருமல், மற்றும் காச நோய் குணமாக்க உதவியாக இருக்கும்.





No comments:

Post a Comment

AdSense-03