உடல் ஆரோக்கியம் பேணும் வெங்காயம், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

07/09/2018

உடல் ஆரோக்கியம் பேணும் வெங்காயம்,



வெங்காயத்தின் பலன்கள்..! 

வெங்காயாத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், என இரு வகையாக சந்தையில் கிடைக்கின்றன. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற  பொருள் காணப்படுகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமீன்கள், தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

* சிறிதளவு வெங்காயத்தை தோலை உரித்து அதனுடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய், இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

* வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா வித மூலக்கோளாறுகளும் நீங்கும்.

* சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டைச்செடி  இலைச் சாற்றை கலந்து காதில் விட காதுவலி குறையும்.

* வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும், கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குரையும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

* தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

* நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

* வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

* பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தை உண்ண வேண்டும், இதனால் விஷம் இரங்கும்.

* சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாக பயன்படுத்தலாம்.

* தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

* வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

* தினமும் மூன்று சிறிய வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

இதை மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றி..


No comments:

Post a Comment

AdSense-03