முன்னேற்றும் பொன்மொழிகள், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

12/11/2018

முன்னேற்றும் பொன்மொழிகள்,


* ஒருவர் தணியாத ஆர்வம் கொண்டு இருந்தால் அதில் அவரது தனித்தன்மை துலங்குகின்றது, மனம் கூர்மையடைகிறது, உள்ளுணர்வால் இயக்கப்படுகிறது, படைப்புத் திறன் கூடுகிறது, வாழ்வின் நரம்புகள் விரிவடைருகின்றன, இத்தகைய மனிதன் தான் பெரியவற்ரைச் சாதிக்கின்றான்.
                                  - நார்மன் வின்சென்ட் பீல்.

* செயலிழந்து நிற்கும் பல நிறுவனங்கள் தங்களது குறைகளை காணாமல் பார்வையற்றவையாக இருக்கின்றன. அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாதவர்கள் அல்ல. தங்கள் குறைகளை பார்க்க மறுக்கிறார்கள் பார்த்தால் சரிசெய்து விடுவார்கள்.
                                                      - ஜான் கார்டனர்.

* உங்கள் பேருந்தில், மின்சார ரயிலில், அலுவலகங்களில், தெருவில், பசியை அடக்கிக்கொண்ட சிலர் எப்போதுமே கூட வருகிறார்கள். அவர்கள் தங்களது சுய மரியாதையைத் தின்று விடக் கூடாது என்று வைராக்கியமுடன் இருக்கிறார்கள். ஆனாலும் பசி, தன் நூறு கைகளால் அவர்கள் உடலை பிசைந்து கொண்டே இருக்கிறது. வெகு அரிதாகவே மனிதன் பசியை வெல்கிறான். பெரும்பாலும் பசிதான் மனிதனை வென்றுவிடுகிறது.!
                                       - எஸ். ராமகிருஷ்ணன்.

* வாழ்க்கையில் இரண்டை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கூட்டத்தோடு கலந்து விடுதல் அல்லது தனித்துவத்தோடு வாழ்தல்; தனித்தன்மை வேண்டுமென்றால் பிறரைப் போல் இல்லாமல் நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ, அவராக இருக்க முயல வேண்டும்.
                                             - ஆலன் ஆஷ்லி பிட்.

* "என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று சொல்ல வேண்டுமென்றால், என் மன உறுதியைத்தான் சொல்லவேண்டும். எப்போதுமே ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அதை நோக்கி தான் என்னுடைய எல்லா செயல்களும் இருக்கும். சிறு வயதிலிருந்தே நிறைய போராட்டங்களை சந்தித்து வந்ததாலே மன உறுதியோடு போராடு எனக்கு கஷ்டமாயில்லை."
                                                           - கேரி பேக்கர்.

* தேவைப்படும் அளவுக்கு ஆரோக்கிய வாழ்க்கைக்கான வசதிகளை உறுதிப்படுத்துவதிலும், நோய் நீக்கும் திறனிலும், உயர்ந்த மலைப்பிரதேசம், பாலைவனம், தண்ணீரின் அடியில் அல்லது விண்வெளி என எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் திறம்பட செயல்படுத்துவதற்கான நலவாழ்வு வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இந்தப் பணியை மேற்கொள்வது உயிர் அறிவியல் ஆய்வுக்கூடங்களின் மிகமுக்கியமான குறிக்கோளாகும்.
                                   - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

* இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஒரு காலத்தில் மனிதனின் கற்பனையாக இருந்ததுதான். மின்சார விளக்கு எடிசனின் கற்பனை. தொலைபேசி கிரகாம் பெல்லின் கற்பனை. டிவி, சினிமா, ஏசி, கார், விமானம், செல்பேசி, ஐபாட் , டிஜிட்டல் கேமரா, மடிக்கணினி, என இன்றைய நிஜங்கள் எல்லாமே ஒரு மனிதனின் அல்லது ஒரு அமைப்பின் கற்பனையில் உருவானவை தான்.
                                                             - நாகூர் ரூமி.

* எந்தவித முயற்சியிலும், உழைப்பிலும், ஈடுபடாமல் வெறுமனே கனவு உலகில் மிதந்து கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எத்தகைய உயர்வையும் பெறப்போவதில்லை. உயர்ந்த முயற்சியிலும், உழைப்பிலும் ஈடுபடுபவர்கள் தான் மனித இனத்துக்கு முழுமையாகப் பயன்பட்டு சரித்திர நாயகர்களாகத் தங்களை உயர்த்திக்கொள்கின்றனர்.
                                             - வே. தமையந்திரன்.

No comments:

Post a Comment

AdSense-03