நம்பிக்கை மனிதர்கள். - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

21/11/2018

நம்பிக்கை மனிதர்கள்.


நம்பிக்கை மனிதர்கள்..

ஒரு சமயம் முல்லா நசுருதீன் தன் நண்பனை பார்க்க அவரது கடைக்குச் சென்றார். கடையில் வியாபாரம் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். 'வியாபாரம் நன்றாக இல்லை' என்று நண்பன் கூறினான்.

வியாபாரத்தை உயர்த்த நீ முயற்சிக்கவில்லையா? என்று முல்லா கேட்டார். முயற்சி செய்ய ஆசைதான். ஆனால் வசதி இல்லையே என்றான் நண்பன்.

முல்லா அவனிடம் உன் கடையில் தோல் இருக்கிறதா? என்று கேட்டார்.
அவன் உள்ளது என்றான். ஆணி இருக்கிறதா என்று கேட்க உள்ளது என்றான். சரி ஊசியும் நூலும் உள்ளனவா? என்று கேட்க உள்ளன என்றான்.

அப்படியானால் இவற்றைக் கொண்டு நீ ஏன் செருப்பு தைத்து விற்கக்கூடாது? என்று முல்லா கேட்டார். சும்மா அமர்ந்திருப்பதை விட இருப்பதைக் கொண்டு வாழ்வது தான் புத்திசாலித்தனம் என்று உணர்த்தி சென்றார்.

"தாமாக எதுவும் மாறாது நாம்தான் மாற்ற வேண்டும்"
><><><><><><><><><><><><><><><><><><><><

நடிகர் சார்லி சாப்ளினின் மாமா யூஜின் கிளாஸ்டன் ஓனில் என்பவர் இலக்கியத்துக்காக நான்குமுறை (1920,1922,1928,1957) உலகப்புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றவர்.
இவரது முதல் இரண்டு திருமணங்களும் பிரச்சனையில் முடிந்தது. இதனால் மனவேதனை பட்ட இவர் தன் மனதில் இருந்த வேதனைகளை எல்லாம் இலக்கியங்களாகப் படைத்தார்.
இவரது கவிதை வடிவான எழுத்துக்கள் தான் முதன்முதலில் அமெரிக்காவில் நாடக வடிவில் அமைந்தது.
"இரவில் ஒரு நெடிய பயணம்" என்னும் இவரது நாடகம் இருபதாம் நூற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்ந்தது.
1936 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. 1937 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு யூஜின் ஓனிலுக்கு வழங்கப்பட்டது.

"அழகான சிறகுகள் மட்டுமே அழகான பறவையின் இலக்கணம் அல்ல"
=========================================

சீன தேசத்தில் ஒரு மனிதன் அரசனைச் சந்தித்து "என்னால் முசுக் கொட்டை மர இலையை இயற்கையாக இருப்பது போலச் செயற்கையாக உருவாக்கித் தர முடியும்" என்று கூறினான்.

" அப்படியா?" என்று அரசன் வியந்த போது "செயற்கை இலையை உங்களால் இயற்கையிலிருந்து வேறுபடுத்தவே முடியாது" என்று அவன் சவால் வேறு விட்டான். அதற்கு அரசன் "சரி, அந்த இலையைச் செய்து கொண்டு வந்து காட்டு" என்று கூறி அனுப்பினான்.

சில மாதங்கள் கழித்து அவன் இலையோடு திரும்பி வந்தான். அந்த இலைக்கும் உண்மையான இலைக்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை. இதை அரசன் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
அரசன் அதன் பிறகு அவனிடம் "இந்த இலையை உருவாக்க உனக்கு எத்தனை காலம் எடுத்தது?" என்று கேட்க அவன் 'இரண்டு மாதம்' என்று கூறினான்.
"இரண்டு மாதத்தில் முசுக்கொட்டை மரம் எத்தனையோ ஆயிரம் இலைகளை தருமே" என்று கூறிவிட்டு "உன்னை பாராட்டுகிறேன்" ஆனால் இயற்கையை நம்மால் ஒருபோதும் வெல்ல முடியாது என்று கூறினான் அரசன்.

"கேள்விகளை நீர்த்துப்போக வைக்கும் பதில்களே சுவையானவை"
========================================

இங்கிலாந்து மன்னன் ஹென்றி தன் மனைவியின் தலையை வெட்டிக் கொன்று விட்டு மகள் முதலாம் எலிசபெத்தை கடுமையான சிறையில் அடைத்துவிட்டான். அதோடு தனக்குப் பின் நாட்டை ஆளத் தன் மகள் தகுதியற்றவள் என்றும் முதலில் எழுதி வைத்தான். பின்பு அந்த உயிலை மாற்றிவிட்டான்.

ஹென்றி மறைவுக்குப்பின் ஆட்சிக்கு வந்த முதலாம் எலிசபெத் மூன்றே நாட்களில் தனக்கு ஆலோசகராக அறிஞர் சிசில் பிரபுவை நியமித்தாள். இந்த பிரபு தான் இறுதிவரை அரசிக்கு ஆலோசனை தந்து நல்லாட்சி செய்ய உதவினார்.

நல்ல அறிஞர் மீது கொண்ட நம்பிக்கையால் இதைச் செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தான் கல்வியும், கலையும், சிறந்து விளங்கின. இலக்கியங்கள் பல உருவாக்கப்பட்டன.

"யோசனைகள் என்ற மூலதனம் திறமையானவர்களிடம் இருக்கும் போது தான் பலன் கிடைக்கிறது"
=========================================

ஹென்றி ஃபோர்டு கார் தொழிற்சாலை மூலம் கார்களை அறிமுகப்படுத்தி உலக அளவில் புகழ் பெற்றவர். மிகப்பெரிய கோடீஸ்வரர் வாழ்ந்தவர்.

அவரது திருமண வாழ்வின் 50 ஆண்டுகள் ஆன போது அவருக்கும், அவரது மனைவிக்கும் "திருமண வாழ்வின் பொன்விழா" நடத்தப்பட்டது.
விழா முடிந்ததும் ஹென்றி ஃபோர்ட் ஐ சூழ்ந்து கொண்ட நிருபர்கள் "உங்களது திருமண வாழ்வின் பொன்விழா ரகசியம் என்ன?" என்று கேட்டார்கள்.

ஹென்றி ஃபோர்ட் சிரித்தவாரே "அதற்கு ஒரு விதி உண்டு. அது வெற்றிகரமான ஒரு காரை வாங்குவதற்கான விதியை போன்றது" என்று கூறினார்.

நிருபர்கள் "என்ன விதி?" என்று ஆவலோடு கேட்டார்கள். திருமணத்தில் "ஒரு மாடலை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்." என்று கூறிவிட்டு தன் மனைவியை பார்த்தார் ஹென்றி ஃபோர்ட். கார் வாங்கும்போது ஒன்றில் நம்பிக்கை கொண்டு வாங்குவது போல திருமணத்திலும் ஒருவரை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்தினார் ஹென்றி ஃபோர்ட்.

"பெண் நன்றாக இருக்கும் இடம்தான் செழிப்பாக இருக்கும்"
=========================================

No comments:

Post a Comment

AdSense-03