கருஞ்சீரகம் - அற்புத குணங்கள் நிறைந்த அருமருந்து, - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

17/07/2018

கருஞ்சீரகம் - அற்புத குணங்கள் நிறைந்த அருமருந்து,



கருஞ்சீரகம்..!

கருஞ்சீரகம் ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞ்சி என பெயர்,
இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது,

"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று இஸ்லாம் மதத்தின் இறைத்தூதர் நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது,

யுனானி மருத்துவத்தில் இன்றளவும் இதன் எண்ணெயை பயன்படுத்தப்படுகிறது,
மேலும் அரபு நாடுகளில் இதனை உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது,

இச்செடி 40 முதல் 50 செ.மீ உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் நிறைந்து இருக்கும். இவை கறுப்பாகவும் உறுதியாகவும் இருக்கும்,

இதன் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும்
அவசியமான அமினோ அமிலங்கள்,
அவசியமான கொழுப்பு அமிலங்கள்,
வைட்டமின் பீடா - கரோடின்,
கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது,

இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய், மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது,

கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட் (Antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (Anti inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது,
கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

மருத்துவ குணங்கள்:-

இந்த பொடியை 4 கிராம் எடுத்து நீராகாரத்தோட 3 ல இருந்து 7 நாட்கள் வரைக்கும் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் விஷப்பூச்சிகடியாக இருந்தாலும் வேறு நச்சு கடியாக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்,

கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்,

கருஞ்சீரகம், சுக்கு தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து 2 கிராம் அளவுக்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் நோய் குணமாகும்,

கருஞ்சீரகத்தை தயிர் சேர்ந்து அரைத்து உடலில் அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் சொரி, சிரங்கு, படை போன்றவை மறையும்,

5 கிராம் கருஞ்சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் சுவாச பிரச்சினைகள் சீரடையும்,


கருஞ்சீரகத்தை நெல்லிக்காய் சாற்றில் ஊற வைத்துக் காய வைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்,

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்கு சிறந்த மருந்தாகும்,

சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் கழுவி வர முகப்பரு மறையும்,

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல ஒரு நோய் நிவாரணியாகும்,
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை பொடியாக்கி 50 மி.லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சூடு செய்து வடிகட்டி இரண்டு துளி மூக்கில் விட்டால்  மூக்கடைப்பு விலகும்,

கருஞ்சீரக பொடியை 1கிராம் எடுத்து மோர் உடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் விடாமல் வரும் விக்கல் பிரச்சினை குணமாகும்,

வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், இவைகளை தனி தனியாக கருகாமல் வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை குடித்த பின் எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. இரத்தம் சுத்தரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது,

தொடர்ச்சியான இருமலுக்கு 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்,
நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்,


ஒரு கிராம் கருஞ்சீரக பொடியை எடுத்து நீராகாரத்தோடு குடித்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்,

கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி, இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்,

கருஞ்சீரக பொடியை ஒரு துண்டு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷ பிரச்சினை தீரும்,

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும், கரையும். இதை காலை, மாலை, இரு வேலை சாப்பிடலாம்,

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்து வாய் கொப்பளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்,

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.
இதை பொடி செய்து கரப்பான், மற்றும் சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தேய்த்துக் குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.
குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது,

நாய்க்கடி, பிரசவ இரத்த போக்குத் தடங்கல், கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்,

கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்,

மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகத்தை வருத்து தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இரு வேலை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து சிறுநீர் பிரச்சினை தீரும்,

கருஞ்சீரகத்தை வெற்றிலை சார் விட்டு அரைத்து காது, கன்னப்பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்,

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க குழந்தை பெற்ற மூன்றாவது நாளிலிருந்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை, ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்,
கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது,


No comments:

Post a Comment

AdSense-03