இருதய நோய், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

31/07/2018

இருதய நோய்,



இருதய நோய்கான காரணம் என்ன?

இருதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இருதய நோய் ஏற்படுகிறது,
பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி, ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல், போன்ற காரணங்களாலும் இருதய நோய் ஏற்படுகிறது,

எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம். அந்த அளவுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,


இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. இவ்வாறு படியும் கொழுப்புகள் "பிளேக்‌ஸ்" என அழைக்கப்படுகிறது,

இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது,

இருதய நோய்களுக்கான ஆபத்து காரணிகள்,

* அதிக இரத்த அழுத்தம்,
* நீரிழிவு நோய்,
* அதிக இரத்த கொழுப்பு,
* புகைப்பழக்கம், அதிக குடிப்பழக்கம்,
* குடும்பத்தில் தொடரும் இருதய நோய்,
*  அதிக எடை அல்லது உடல் பருமன்,
* அதிக கொழுப்பு உணவு,
* மன அழுத்தம்,
* உடற்பயிற்சியின்மை,

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்,

* நெஞ்சு வலி,
* மூச்சடைப்பு,
* நாடி, கழுத்து அல்லது முதுகில் வலி,
* புஜம் அல்லது தோள்பட்டையில் வலி,
* வியர்வை, குமட்டல் அல்லது வாந்தி,
* வியர்வையும், மனக்கலக்கமும்,

எந்த காரணங்களால் மாரடைப்பு வரும்?

* புகைபிடித்தல்,
* சர்க்கரை நோய்,
* உயர் இரத்த அழுத்தம்,
* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்,
* அதிக கொலஸ்ட்ரால்,
* உடல் உழைப்பு இல்லாமை,
* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு,
* மன அழுத்தம், அதிக கோபம் மற்றும் படபடப்பு,
* மரபியல் காரணிகள்,

மாரடைப்பின் அறிகுறிகள் என்ன?
மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுக்கொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்,

பொதுவான அறிகுறிகள்,

* நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்,
* வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்,
* மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்,
* வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் வலி,

இருதய செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கும் வழிமுறைகள்,

* உணவு கட்டுப்பாட்டு,
சாப்பிடும் பொருளில் உள்ள உப்பின் அளவை குறைத்தல். மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளை குறைவாக உண்ணுதல்,
* மதுப்பழக்கத்தைக் குறைத்தல்,
* உடற்பயிற்சி,
* உடல் எடை,

மாரடைப்பின் போது முதலுதவி,

* நோயாளியை ஒய்வாக உட்கார வைக்கவும்,
* இறுக்கமான ஆடைகளை தளர்த்தவும்,
* ஏற்கனவே இருதய நோயாளியினால் உட்கொண்டுவரும் மருந்தை கொடுக்கவும்,
* 3 நிமிடங்களில் வலி குறையாவிட்டால் அவசர மருத்துவ உதவியை அழைக்கவும,
* நோயாளி மயக்கமாக இருந்தால் மருத்துவ உதவி வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கவும்,

உங்கள் இருதயத்தை நலமாக வைக்கக் குறிப்புகள்,

* முழு தானியம், பழம், காய்கறிகள் போன்ற குறைந்த கொழுப்பும் அதிக நார்ச்சத்தும் கொண்ட உணவை உண்ணவும்,

* கேன் உணவு, உறை உணவு, ஆயத்த உணவு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்,

* புகையிலை, புகை, தவிர்க்கவும்,

* மதுவை தவிர்க்கவும், 30% ஆபத்தை குறைக்கும்,

* அதிக எடையாக இருந்தால் உடல் கொழுப்பை குறைக்கவும்,

* குறைந்தது 30 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்யவும்,

* உப்பை குறைக்கவும்,

* யோகா, தியானம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்கவும்,

* எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்,

* முறையான உடல்நல பரிசோதனை செய்யவும்,

No comments:

Post a Comment

AdSense-03