கண்டுபிடிக்க முடியாத இரகசிய குறியீடு - Coding Language. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/12/2018

கண்டுபிடிக்க முடியாத இரகசிய குறியீடு - Coding Language.


Alan Turing ஐ பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது ஜெர்மன் இராணுவப்படைகள் செய்திகளை ரகசியமாக அனுப்புவதற்காக உபயோகித்த எனிக்மா என்ற தொழில்நுட்பத்தையும் கடினமான ரகசிய குறியீட்டின் பொருளையும் கண்டுபிடித்த அறிஞர் ஆவார் அவர்.

ஒருவேளை Alan Turing இப்போது இருந்தாலும் கூட அவரால் கூட கண்டுபிடிக்க முடியாத வேறொரு இரகசிய குறியீட்டு மொழியும் (Coding Language) இருக்கிறது.
வாய்னிஜ் மேனிஸ்க்ரிப்ட் (Manuscript) என்ற கையெழுத்துப் பிரதிதான் அது.

பதினைந்தாம் நூற்றாண்டில் தான் இது எழுதப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் இதை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்பதை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதுவும் இதை பற்றி யாருக்கும் தெரியாது. இது கண்டுபிடிக்கப்பட்டது கூட 1912 இல் இதை பிரசுரித்த Polish நாட்டு புத்தகப் பதிப்பாளர் Wilfrid Voynich என்பவருடைய பெயரில்தான்.

அன்று முதல் இன்றுவரை இதில் இருப்பதைக் கண்டுபிடிக்க உலகப்புகழ்பெற்ற ரகசிய குறியீட்டு நிபுணர்கள் பலரும் முயற்சி செய்கிறார்கள். 240 பக்கங்கள் உடைய இந்த புத்தகம் முழுவதும் படங்களாலும், கோடுகளாலும் நிறைந்திருக்கிறது.

அதிகமாக இவற்றில் செடிகள், பூக்கள் ஆகியவற்றின் படங்களே இடம்பெற்றிருக்கின்றன. இதனால் விவசாயம் தொடர்பான ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் ஊகிக்கிறார்கள். என்றாலும் உறுதியாகச் சொல்வதற்கு ஒரு சான்றும் கிடையாது. இப்போது இந்த கையெழுத்துப் பிரதி ஏல் பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment

AdSense-03