இந்தியாவில் மனித நூலகம் - The Human Library in India.. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/12/2018

இந்தியாவில் மனித நூலகம் - The Human Library in India..


ஜூன் 18-2017, அன்றைய தினம் நம் நாட்டுடைய தலைநகரம் டெல்லி ஒரு முக்கிய சிறப்பைப் பெற்றிருக்கிறது. அதிகம் யாரும் கேள்விபட்டிருக்க முடியாத ஒரு சிறப்பாகும்.
அது என்னவென்றால் " The Human Library " ஒரு பதிப்பு டெல்லியிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நாம் நூலகத்துக்கு போனால் சாதாரணமாக அங்கே இருக்கின்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்போம். நம் விருப்பமும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி நமக்கிருக்கும் சந்தேகங்களும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய புத்தகத்தை தீர்மானிக்கின்றன. ஆனால், இந்த மனித நூலகத்தில் நமக்கு படிப்பதற்காக கிடைப்பது மனிதர்களையே ஆகும். பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள், வாழ்க்கை அனுபவங்களை உடையவர்கள், இவர்கள்தான் இந்த மனிதர்கள். 20 நிமிட நேரத்துக்கு நாம் இவர்களோடு பேசலாம் கேள்விகளையும் கேட்கலாம். 2000மாவது ஆண்டில் டென்மார்க்கில் கோபபன்கனில் ஆரம்பித்த ஒரு திட்டமாகும். இந்த மனித நூலகத் திட்டம் இப்போது ஏறக்குறைய 70க்கும் மேலான நாடுகளில் இதன் பதிப்புகள் உள்ளன.

நம் நாட்டிலேயே ஏற்கனவே ஹைதராபாத்திலும், மும்பையிலும் இதை பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் நண்பர்கள் இந்த நூலகத்துக்கு போய் பார்த்துவிட்டு அதன் சிறப்பைப் பற்றி மேலும் ஏதாவது சொல்லலாமே? அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்குமே..!

No comments:

Post a Comment

AdSense-03