உயிர்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள்.! - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

07/12/2018

உயிர்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள்.!


உயிர்ச்சத்துள்ள உணவை மட்டுமே உண்ணுங்கள்.!

நீங்கள் அன்றாடம் மூன்று வேளைகளிலும் உணவு உண்ணுகிறீர்கள். இந்த உணவுகளில் சத்து இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள் கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. உணவு ருசியாக இருந்தால் போதும் மற்ற எதைப் பற்றியும் நீங்கள் கவலைப் படுவதில்லை. நீங்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். விருந்துகளுக்கெள்ளாம் சொல்கிறீர்கள். அங்கே தரப்படும் உணவு தரமானவையா என்பது குறித்து நீங்கள் கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. வாய்க்கு சுவையாக இருந்தால் போதும் உடனே உணவை கூட்டிக் கொள்கிறீர்கள்.

இன்று விரைவு உணவு என்று சொல்லப்படுகின்ற " Fast Food " நீங்கள் வகையாக சிக்கிக் கொண்டீர்கள்.
Pizza, Burger போன்ற உணவு வகைகளை ருசித்து சாப்பிடுகிறீர்கள். இந்த உணவு வகைகளில் எந்த சத்தும் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகளில் இருக்கும் பாசிப்பயறு, உளுந்து போன்ற பயிறு வகைகளில் வண்டுகள் உற்பத்தியாகின்றன. இந்த வண்டுகளை எடுத்து Boost, Horlicks, Complan போன்ற டப்பாக்களில் போட்டு வையுங்கள். என்ன ஆகும்? வண்டுகள் செத்து ஒழியும். காரணம் அந்த டப்பாக்களில் இருக்கும் மாவுப் பொருட்களில் உயிர்சத்து என்பது கடுகளவும் கூட இல்லை. வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், உற்பத்தி ஆகி விடக் கூடாது என்று கருதி சில இரசாயனங்களை சேர்க்கிறார்கள்.
இந்த இரசாயனம் கலந்த மாவுச்சத்துக்களை குழந்தைகள் சாப்பிட்டால் உயிரை உற்பத்தி செய்யும் சக்தி குறைந்து விடும்.
சக்தி குறைந்து விட்டால் சிறுவர்கள் பலவீனப்பட்டு போவார்கள். இவர்களுக்கு திருமண வயதை அடைந்ததும் இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் முடித்து வைத்து விடுவார்கள். ஆனால் மகப்பேறு இவர்களுக்கு கிட்டவே கிட்டாது. இரசாயனம் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் சக்தி எங்கிருந்து வரும் எனவே சிறுவர்களுக்கு உயிர் சத்துள்ள உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.


நீங்கள் சிறுவர்களுக்கு கொடுக்கும் உணவில் உயிர்கள் (புழு, பூச்சி, வண்டுகள்) இருந்தால் தப்பில்லை. அந்த உணவே உயிர்ச் சத்துள்ள ஓர் சிறந்த உணவாகும். ஒரு உணவுப் பொருளில் வண்டு விழுந்தால் அது உயிர் சத்துள்ள உணவு என்று கண்டுகொள்ள வேண்டும். சில காய்கறிக் கடைகளில் பலபலவென்று கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளை பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், எடுப்பாகவும் இருக்கும். இந்த காய்களில் வண்டு அல்லது பூச்சி என்பதை பார்க்கவே முடியாது. ஏனென்றால் செயற்கை உரத்தைப் போட்டு செடியை பிரமாதமாக வளர்த்திருப்பார்கள். இரசாயன உரங்களைப் போடப்போட எந்த வண்டும் காய்கறி செடியில் வாலாட்ட முடியாது. உரங்களை விவசாயிகள் போட்டு கொண்டிருப்பதால் வண்டுகள், பூச்சிகள் அந்த செடியில் இருந்து ஓடியே போய்விடும். அல்லது அழிந்துவிடும்.

இயற்கை உரங்களை போட்டு வளர்த்து வரும் காய்கறிகளில் வண்டு வம்பளந்து கொண்டிருக்கும். வண்டுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகளே மிகச்சிறந்த காய்கறிகளாகும். இதில் உயிர் சத்துக்கள் அதிகமாக உள்ளன எனவே பலபலவென்று மின்னுகின்ற கவர்ச்சியான காய்கறிகளை வாங்கி ஏமாந்து போகாதீர்கள். அந்த காய்கறிகளில் சத்து என்ற ஒன்றை கடுகளவும் கூட நீங்கள் எதிர்பார்க்க முடியாது.


காலிஃப்ளவரும் அதேபோலத்தான் காலிஃப்ளவரில் குடைந்து கொண்டிருக்கும் வண்டுகளை செயற்கை உரங்களை போட்டு கொன்று விடுகிறார்கள். செயற்கை உரங்கள் ஏராளமாக போட்டு வளர்க்கப்பட்ட இந்த காய்கறிகளில் என்ன சத்துக்கள் இருக்கும்? என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள். சத்தில்லாத வெறும் சக்கையைத்தான் நீங்கள் சாப்பிட்டு வருகின்றீர்கள்.

வெண்டைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய் போன்ற நாட்டு காய்கறிகளில் பல முறை செயற்கை உரங்களை தெளிப்பதால், காய்களில் உள்ள இயற்கை சத்துக்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடுகின்றன. என்ற பேருண்மையை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

நன்றாக பசி எடுத்தால் மட்டும் சாப்பிடுங்கள். பசித்தபின் நீங்கள் உண்ணும் உணவு அமிழ்தத்தை ஒக்கும். உங்களுடைய உடல் நலத்திற்கு எந்த உணவு பொருந்துகிறதோ, அதை மட்டும் சாப்பிடுங்கள். நன்கு செரிமானம் ஆகிவிடும்.
பொருந்தாத உணவு ராஜ உணவாக இருந்தாலும் சரி அந்த உணவை ஏற்றுக் கொள்ளாதீர்கள். மாறுபாடில்லாத உணவை அதாவது உங்கள் உடல்நலத்திற்கு பொருந்தும் உணவை மட்டுமே உண்ண வேண்டும். இதனால் உங்களுடைய ஆரோக்கியம் மேம்பட்டு நிற்கும்.


இன்னொரு முக்கியமான கருத்து உங்களுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருப்பதால் அதிகமான உணவை வயிற்றுக்குள் திணிக்காதீர்கள். பெருந்தீனி உங்களுக்கு பேராபத்தில் முடியும். உடம்பில் அதிகமான எடை கூடிவிடும். உங்களை பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். மருத்துவரை நாடி போகவேண்டியிருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இவைகளெல்லாம் தேவைதானா? வள்ளுவரும் மிக அழகாக சொல்கிறார்.
" அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு "

முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகி விட்டால் அதன் பின் நீங்கள் அளவோடு உணவை உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் உடம்பைப் பெற்ற நீங்கள் அந்த உடம்பை நீண்ட காலம் நிலைத்து வைத்திருக்க முடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே நீங்கள் உயிர்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். அந்த உணவை அளவோடு உண்ணுங்கள். நீங்கள் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆன பின்பு உணவினை உண்ணுங்கள். இப்படி நீங்கள் செய்து வந்தால், நீங்கள் இந்த உலகில் நெடுங்காலம் வாழலாம்.

நம்ம பழமொழி ஒன்று உங்களுக்காக..

"வயிற்றில் போடும் குப்பையை குறைத்தால் தொப்பை தானாக குறையும்"

1 comment:

AdSense-03