சோம்பின் மருத்துவ பயன்கள், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

09/10/2018

சோம்பின் மருத்துவ பயன்கள்,


சுகம் தரும் சோம்பு..!

நாம் சமைப்பதற்காக பயன்படுத்தும் சோம்பில் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. அந்த மருத்துவ பயன்கள் பற்றிய சிறப்பை நாம் இங்கு பார்போம்..

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்ததும் ஒரு தட்டில் சிறிது சோம்பு வைப்பார்கள் சிலர் அதை சிறிது வாயில் எடுத்து போட்டு சாப்பிடுவதை நாம் பார்திருப்போம். அதன் அர்த்தம் என்னவென்று இப்போது நமக்கு புரிந்துருக்கும். ஆம் உண்ணும் உணவை எளிதில் ஜீரனம் ஆக்கும் தன்மை சோம்புவிற்கு உண்டு.
எளிதில் ஜீரனம் ஆகாத அசைவ உணவு வகைகளில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம், என்றும் கூட அழைக்கப்படும். இது வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது.

* செரிமான சக்தியை அதிகரிக்கும்.
எளிதில் செரிமானமாகாத உணவை  கூட செரிமானமாக்கும் சக்தியுடையது சோம்பு. உணவு உண்ட பின் சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று சிறிது சிறிதாக அதன் சாற்றை இறக்கினால் உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகும்.

*பசியின்மையை போக்கும்.
சோம்பு பசியின்மையை போக்குகிறது.
பசியின்மையால் அவதிப்படும் நபர்கள்
கொஞ்சம் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் விரைவில் பசியின்மையிலிருந்து விடுபடலாம்.

* ஈரல் நோயை குணமாக்கும்.
சோம்பு ஈரல் நோயை குணமாக்கும் தன்மை கொண்டது.
சோம்பை இளம் சூட்டில் வறுத்து பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து ஒரு டீஸ்பூன் இரு வேலை சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

* குடல்புன் குனமாகும்.
உண்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வு சீற்றம் அடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல்புன் உருவாகிவிடும். இந்த குடல்புன் குனமாக தினமும் உணவில் இதை சேர்த்து வந்தால் குடல்புன் விரைவில் குணமாகும்.

* வயிற்றுவலி, வயிற்று பொருமல் நீங்கும்.
அஜீரண கோளாறுகளால் வயிற்றில் வாயு சீற்றம் ஏற்பட்டு வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஏற்படும். இதனை போக்க உடனடியாக சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

* கர்பப்பை பிரச்சினைகள் நீங்கும்.
கர்ப்பப்பையில் பிரச்சினைகள் ஏற்ப்பட்டால் கருதரிப்பு நடக்காது. இதனால் பலர் குழந்தை பேறு இல்லாமல் அவஸ்தைபடுவார்கள்.
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடியாக்கி வேலையொன்றுக்கு 2கிராம் வீதம் தனியாகவோ அல்லது பணங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கர்பப்பை பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.

* இருமல், இரைப்பு குணமாகும்.
நாள்பட்ட வரண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிபடுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வர நாள்பட்ட இருமல், இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவைகள் குணமாகும்.

* குளிர்காய்ச்சல் குணமாகும்.
அதிக குளிர்காய்ச்சல் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட சோம்பை நான் அன்றாடம் நம் உணவில் சேர்ந்து " நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் " என்ற பழமொழிக்கேற்ப்ப நோய் நொடியில்லாமல் வாழ்வோம் வாழ்வில் வளம் பெறுவோம்..

No comments:

Post a Comment

AdSense-03