இதோ சில அருமையான சமயல் டிப்ஸ் உங்களுக்காக - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

08/10/2018

இதோ சில அருமையான சமயல் டிப்ஸ் உங்களுக்காக



* சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிது உப்பை தடவிக் கொண்டால் கையில் மாவு ஒட்டாது.

* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

* அரிசி மற்றும் காய்கறிகளை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்புடன் வளரும்.

* வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும் அப்படி ஆகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் பெருங்காய டப்பாவில் வைத்து விட்டால் பெருங்காயம் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்..

* ரவா, மைதா , உள்ள டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராமல் இருக்கும்.

* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க சிறிது இஞ்சியை தோல் நீக்கி தட்டி தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

* காய்கறிகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்கக் கூடாது.
ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துக்கள் போய்விடும்.
அதில் உள்ள மனமும் போய்விடும்..

* காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும் அப்படி வராமல் இருக்க சிறிது உப்பை போட்டு வறுத்தால் நெடி வராமல் இருக்கும்.

* பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பு நீக்கி நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

* நெய் பிரெஷ் ஆக இருக்க அதில் சிறிய வெல்லம் கட்டியை போட்டு வைத்தால் நெய் பிரெஷ் ஆக இருக்கும்.

* காப்பி டிகாஷன் போடுவதற்கு முன்பு சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

* சீடை செய்யும் போது அது வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட்டால் அது வெடிக்காமல் இருக்கும்.

* சப்பாத்தி போடும்போது சப்பாத்தி கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நான்காக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* முட்டைக்கோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுகட்டை சுட்டால்  விரிந்து போகாமல் இருக்கும்.

* எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும் போது உப்பை துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராமல் இருக்கும்.

* இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

* சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்..

* டீத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது ஏலக்காய் போட்டு வைத்திருந்தால் டீ நல்ல வாசனையாக ருசியாக இருக்கும்..

* காலிஃபிளவரை சமைப்பதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் கொதித்த  சுடு தண்ணீர் வைத்து அதில் சிறிது உப்பு கலந்து காலிஃபிளவரை அதில் முக்கி எடுத்தால் அதில் உள்ள கண்ணுக்கு புலப்படாத பூச்சிகள் வெளியேறிவிடும்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க வேண்டுமென்றால் தண்ணீரில் நனைத்து உடைத்தால் சரிபாதியாக உடையும்.

* வெங்காயத்தை வதக்கும் போது சிறிது சர்க்கரை போட்டு வதக்கினால் வெங்காயம் விரைவாக வதங்கிவிடும்.

* வெங்காயத்தை நறுக்கும் முன்பு குளிர்ந்த நீரில் நனைத்துவிட்டு நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது.



No comments:

Post a Comment

AdSense-03