VISA-வுக்காக வினோத வழிபாடு, - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/12/2018

VISA-வுக்காக வினோத வழிபாடு,


வெளிநாட்டுக்கு போவதற்கு குறைந்தபட்சம் நம்மிடம் என்ன இருக்க வேண்டும்? ஒரு டிக்கெட்டும், விசாவும் எப்படி இருந்தாலும் வேண்டும் என்று சின்ன குழந்தையிடம் கேட்டால் கூட இந்த காலத்தில் சரியாக சொல்லிவிடும். சரியான காசு கொடுத்தால் நாம் டிக்கெட் ஏஜென்சியிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால்? விசா, டிக்கெட் கிடைப்பது போல ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக கிடைத்து விடாது. நாம் போக விரும்பும் நாடு நம்முடைய விசாவுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நமக்கு விசா கிடைக்கும். ஆனால், இன்றோ..! பல நாடுகள் தங்களுடைய விசா வழங்கும் நடவடிக்கைகளில் பல கடுமையான நடைமுறைகளை கொண்டுவந்துள்ளன.

விசாவுக்கான மனுவையும் கொடுத்துவிட்டு நேர்த்திக்கடனைக் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளும் நிலைமை தான் இங்கு ஏற்பட்டுள்ளது. நாம் இதற்காக பஞ்சாபில் பாபா நிகால்சிங் குருத்வாராவுக்கு போகலாம் வாருங்கள்.

விசா விண்ணப்பதாரர்கள் உடைய பிடித்தமான வழிபாட்டு இடமாகும் இது.
இங்கே நேர்த்திக்கடனுக்காக கொடுக்க வேண்டியது ஒரு விமானத்தை தான். வெளிநாட்டுக்கு போக விரும்புபவர்கள் ஒரு விளையாட்டுப் பொம்மை விமானத்தை இங்கு நேர்த்திக்கடனாக கொடுத்தால், அவர்களுடைய விசா பிரச்சினைகள் தீர்க்கப் படுகின்றது என்று இங்கிருக்கும் மக்களின் நம்பிக்கை.

ஏறக்குறைய 150 வருட பழமையான இந்த வழிபாட்டு இடத்தில் எப்போது முதல் இப்படி ஒரு சடங்கு நடைமுறைக்கு வந்தது என்று சரியாக தெரியவில்லை. என்றாலும், விமானப் பயணத்திற்கான வேண்டுதல்களை நிறைவேற்றி, பாபா குருத்துவாரா இப்போது ஏரோபிளேன் குருத்துவாரா என்றே அழைக்கப்படுகிறது. குருத்துவாரக்கு மேல் ஒரு மாபெரும் விமானத்தின் மாதிரியை கட்டி வைக்கிறார்கள்.

பஞ்சாபில் மட்டுமல்லாமல் டெல்லியிலும், ஹைதராபாத்திலும், குஜராத்திலும் எல்லாம் இதுபோல விசா பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் ஒன்றும் விமான நேர்த்திக்கடன் கிடையாது என்பதுதான் இவற்றின் சிறப்பு.

No comments:

Post a Comment

AdSense-03