பைசா கோபுரத்தைப் போல் சாயும் மற்றொரு கோபுரம், - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/12/2018

பைசா கோபுரத்தைப் போல் சாயும் மற்றொரு கோபுரம்,


பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இங்கே உள்ள தேவாலயத்தில் கோயில் மணியைக் கட்டி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட கோபுரம் உலகப் புகழ் பெற்றது. இது சாய்ந்து இருப்பதால் தான்.

பல தடவைகள் கோபுரத்தின் இந்த சாய்வை நிமிர்த்துவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஒரு தடவை சரிந்ததை சரிசெய்து முடித்ததற்கு பிறகு கோபுரம் முன்பிருந்ததை விட கூடுதலாக சாய்ந்து போக ஆரம்பித்தது. 5 டிகிரி வரை இந்த கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது.

நாம் நன்றாக அறியக்கூடிய மற்றொரு கோபுரம் கூட இதே போல சாய்ந்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. லண்டன் நகரத்தின் அடையாளச் சின்னமான "பிக்பேன்" என்று அழைக்கப்படுகின்ற மணிக்கூண்டு தான் அது. ஏறக்குறைய 112 நூற்றாண்டுக்கு முன்பு 1859 இல் கட்டப்பட்டது தான் இந்த கோபுரமணிக்கூண்டு. இப்போது இந்த கோபுரமும் சாய ஆரம்பித்துவிட்டதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். வெறும் கண்களாலேயே இந்த சாய்வை பார்க்கமுடியும் என்றுச் சொல்லப்படுகிறது. என்றாலும், பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்துவதற்குகாக எடுக்கப்பட்ட முயற்சிகளைப் போல எந்த ஒரு முயற்சியும் இப்போது வரை எதுவும் எடுக்கப்படவில்லை. பைசா நகரத்தின் கோபுரம் அளவுக்கு இந்த கோபுரம் சாய்வதற்கு இன்னும் குறைந்தது 4000 வருடங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

AdSense-03