உண்மையான நட்பு உச்சத்தில் கொண்டு போய் சேர்க்கும்! உச்சம் தொட்ட "WhatsApp" இன் வரலாறு. - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

22/12/2018

உண்மையான நட்பு உச்சத்தில் கொண்டு போய் சேர்க்கும்! உச்சம் தொட்ட "WhatsApp" இன் வரலாறு.

Jan Koum , Brian Acton,
இந்த இரண்டு பெயர்களையும் கடைசி வரை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் இவர்கள்தான் WhatsApp உலகத்தை உருவாக்கித் தந்த தொழில்நுட்ப மேதைகள்.

Koum க்கு தற்பொழுது 39 வயதாகிறது. Acton னின்வயது 43,

இரண்டு ஆண்டுகளுக்கு முன் Facebook நிறுவனம் இவர்களிடம் WhatsApp உரிமத்தை அதிக விலைக்கு வாங்கியது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கிற்பார்கள். சும்மா சொல்லுங்கள் பார்போம்.


10 இலட்சம்? 50 இலட்சம்? 1 கோடி? 10 கோடி? 100 கோடி? ஓகே. நானே சொல்லுகிறேன்.

Facebook நிறுவனம் WhatsApp உரிமத்தை ஜஸ்ட் 1,20,000 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். என்ன தலை சுற்றுகிறதா?

யார் இந்த இருவர்கள்?
Jan koum உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வருமை இவரை அமெரிக்காவின் பக்கம் செல்ல துரத்தியது. 16 வயதில் கலிபோர்னியா மாகாணத்தின் மவுண்டன் வியூ என்ற நகரத்தில் வந்து செட்டில் ஆனார்.

அவரும், அவருடைய அம்மாவும் அரசு வழங்கும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தவர்கள்.

19 வயதில் Koum க்கு சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தது. கூடவே இண்டெர்நெட் வசதியும் கிடைத்தது. அவ்வளவுதான் எந்த நேரமும் கம்ப்யூட்டர் கையுமாக இருந்தார்.
"ஹேக்கிங்" தொழில்நுட்பத்தில் கில்லாடியாக மாறினார். உலக முழுவதும் இருக்கும் ஹேக்கிங் குரூப்களில் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய பெரிய நிறுவனங்கள் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நோக்கி வர ஆரம்பித்தது.

" ஹேக்கிங் தொழில்நுட்பம் தீய காரணங்களுக்காக மட்டுமல்ல சில சமயம் நல்ல விஷயங்களுக்கும் பயன்படும் "

எர்னஸ்ட் & யங் என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் பாதுகாப்பு சோதனை பணியாளராக இருந்துகொண்டு கல்லூரியில் சேர்த்து கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்தார்.

Yahoo நிறுவனத்தின் இனை நிறுவனர் டேவிட் ஃபைல் எங்களுடைய நிறுவனத்தில் வந்து இணைந்துக் கொண்டால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று சொன்னாதால் படிப்பை பாதியில் விட்டு விட்டு Yahoo வில் வந்து இணைந்து கொண்டார்.


Brian Acton, இவர் அமெரிக்கர். இவர் ஃபுளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். Apple நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலைக்கு இணைந்து வாழ்க்கையை தொடங்கினார். 1996 ல் Apple நிறுவனத்தை விட்டு விட்டு Yahoo நிறுவனத்தில் வந்து சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது..

தான் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தின் பணிக்காக ஜான் கோம் அடிக்கடி Yahoo நிறுவனத்திற்கு வர வேண்டிய தேவை இருந்தது. கோம் உடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் Brian Acton ஐ மிகவும் அதிகமாக கவர்ந்தது. சில நாட்கள் கழித்து ஜான் கோம் Yahoo வில் இணைந்தார்.

ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை இருந்தது. இருவரும் ஒரே நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய தொடங்கியதும் இருவருக்குள் நல்ல நட்பு வளர தொடங்கியது. வேலை நேரத்திலும் சரி மற்ற நேரங்களிலும் கூட இருவரும் ஒன்றாகவே இணைந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

2007 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே வேலையை விட்டுவிட்டு தென் அமெரிக்காவுக்கு சென்றார்கள்.


WhatsApp பிறந்தது..

Facebook பிரபலமாக ஆரம்பித்ததும் இருவரும் இந்த நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தார்கள். ஆனால் இவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள Facebook நிறுவனம் மறுத்து விட்டது. Yahoo வில் சம்பாதித்து வைத்திருந்த கையிருப்பு பணம் கரைய ஆரம்பித்தது.

2009 ஆம் ஆண்டு கோம் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது Acton க்கும் தன்னுடைய மற்ற நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். மொபைலில் இருந்த அந்த மெசேஜ் அப்ளிகேஷனில் சில வசதிகள் இல்லாத நுணுக்கங்கள் இவருக்கு உதித்தது. ஒவ்வொரு மெசேஜ்கும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் பார்க்கக்கூடிய அளவு இண்டெர்நெட் கனெக்சன் மூலம் கூடுதலாக பணம் செலவழியாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உடனடியாக அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. உடனடியாக Acton னிடம் பேசினார்.

அடுத்த கட்டமாக இருவரும் சில டெவலப் வல்லுனர்களிடம் கலந்துப் பேசினார்கள். இருவருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்தது. இந்த நிறுவனத்தின் பெயர் சூட்டும் நேரம் வந்தது. நாம் மெசேஜில் பொதுவாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அடுத்து என்ன? " What's up " என்று கேட்போம் அல்லவா? இதனை வைத்தே கோம் தங்களது நிறுவனத்திற்கும், அப்ளிகேஷனுக்கும் " WhatsApp " என்று பெயர் சூட்டினார்.


கலிபோர்னியாவில் தன்னுடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 - 2009 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தன்னுடைய " WhatsApp " நிறுவனத்தை தொடங்கினர்.

பெருமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..

ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப் மிகவும் சொதப்பியது. பயனாளர்களும் அதிக அளவில் ஆதரவு அளிக்கவில்லை. ஏற்கனவே மொபைலில் மெசேஜ் அனுப்பும் வசதி இருக்க வேறு எதற்காக? என்று எண்ணினார்கள்.

இது வேலைக்கு ஆகாத காரியம் சம்பளம் குறைவாக கொடுத்தாலும் பரவாயில்லை வேறு எங்காவது போய் வேலைக்குச் சேரப் போகிறேன் என்று கோம் சொன்னதும், ஆக்டன் கோபமாக மறுத்தார். நீ கொஞ்சம் பொறுமையாக இரு இந்த வாட்ஸ்ஆப் மிகப்பெரிய அளவில் சாதிக்க போகிறது அதை நீ பார்க்கத்தான் போகிறாய். என்று தன்னுடைய நண்பனுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தினார் ஆக்டன். அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். டுவிட்டரில் வேலைக்கு விண்ணப்பித்த அவர் டுவிட்டர் மறுத்துவிட்டது.


தன்னுடைய வாட்ஸ்ஆப் க்கு பெரிய அளவில் வரவேற்பும், ஆதரவும் இல்லையென்றாலும்
" முயற்சி செய்வது என்பது முடிந்த அளவு செய்வதல்ல, வேலை முடியும் வரை செய்வதுதான் முயற்சி" என்ற தாரக மந்திரத்தை நினைத்தாரோ என்னவோ கோம். தன் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருந்தார். வாட்ஸ்ஆப் பில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அவ்வப்போது சரிசெய்துக் கொண்டே இருந்தார்.

"கடமையை செய் பலனை எதிர்பார்காதே"
என்ற பழமொழி இவருக்கு சரியாக அமைந்தது. என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை திடீரென ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் "வாட்ஸ்ஆப்" அப்ளிகேஷன் ஐ அதிகம் டவுன்லோட் செய்து உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இரவும், பகலும் வாட்ஸ்ஆப் பில் கடலை போட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் நாட்களில் இரண்டு இலட்சம் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உருவானார்கள்.

நாம் இன்னும் பெரிய அளவில் பன்ன வேண்டும் வா நண்பா என்று ஆக்டனை தன்னோடு வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டார் கோம். Yahoo நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிடைத்த நண்பர்கள் சிலரிடம் முதலீடு திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான முதலீடு செய்து பிஸினஸ் ஐ பெரிய அளவில் எடுத்துச் சென்றார்கள். பிளாக்பெர்ரி மொபைலுக்கும் வாட்ஸ்ஆப் வசதிகள் கொடுக்கப்பட்டதும், வாட்ஸ்ஆப் பின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்தது. ஆக்டன் முன் சொன்னது போல " வாட்ஸ்ஆப் " உண்மையில் சாதிக்க தொடங்கியது.


இன்று..

கடந்த எட்டு வருடங்களில் "வாட்ஸ்ஆப்" அடைந்திருக்கும் வளர்ச்சி யாராலையும் யூகிக்க முடிகிறதா? இன்று இந்த நிறுவனத்தில் பல முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. பேஸ்புக் நிறுவனம் எவ்வளவு தொகைக்கு இந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே நாம் பார்திருப்போம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு கைமாற்றிவிட்டாலும் இன்னமும் தலமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜான் கோம்மும், பிரயன் ஆக்டனும் தான். கோம் சாப்ட்வேர் தொடர்பான வேலைகளை பார்த்துக்கொள்ள ஆக்டன் பிசினஸ் தொடர்பான வேலைகளை பார்த்துக் கொள்கிறார்.இவர்களுடைய உண்மையான நட்பு, உணர்வுப்பூர்வமான நட்புதான் இவர்களை இந்த உட்சத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

வெற்றியின் தாரக மந்திரம் எது தெரியுமா?


பொதுவாக இண்டெர்நெட் பயன்பாடு என்றாலே விளம்பரங்கள் அதிகமாக காணப்படுகிறது. வீடியோ பார்க்கும் போதும், மற்ற செய்திகள் படிக்கும் போதும், பார்க்கும் போதும், ஆரம்பத்தில், இடையில் அவ்வப்போது விளம்பரங்கள் வந்து நம்முடைய எரிச்சலை உண்டாக்கும்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் பிரையன் ஆக்டன் தன்னுடைய டேபிளில் எழுதி வைத்திருக்கும் தாரக மந்திரம் "No Ads, No Games, No Gimmicks" என்ற வாசகம் தான் வாட்ஸ்ஆப் பின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று பலரும் கூறுகிறார்கள். வெற்றிக்கு அதுதான் உண்மையில் காரணம்.

நட்புகள் பரிமாறிக்கொள்ள இடமாக இருக்கும் இந்த வாட்ஸ்ஆப் பில் எந்த குறுக்கீடுகளும், எந்த காலத்திலும் இருக்கக்கூடாது என்று நண்பர்கள் இருவரும் உறுதியாகக் இருக்கின்றார்கள். அவர்களுக்குள் இருக்கும் நட்பின் அருமை அவர்களை விட வேறு யார் அறிய முடியும்.


எதிர்காலத்தில்?

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் எங்கள் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை போல வேறு எந்த நிறுவனத்தையும் நீங்கள் பார்க்க முடியாது. மிகப்பெரிய அளவில் போக வேண்டும் என்று நினைப்பதை விட அவ்வப்போது கிடைக்கும் வெற்றியைத் தக்க வைத்தக் கொள்வதற்காக தான் நாங்கள் கடுமையாக போரடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டாலே மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறலாம். எங்கள் தயாரிப்பை முன்னிறுத்தி எங்களை அதன் பின்னால் மறைத்துக் கொள்கிறோம். இதைத் தவிர வேறு எந்த பிசினஸ் சீக்ரடும் கிடையாது. என்று சொல்கிறார் ஆக்டன்.

வாட்ஸ்ஆப் குழந்தையும் பயன்படுத்தும் வகையில் மிக எளிதாக இருக்கிறது. பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது.
மற்ற சமூக வலைத்தளம் மாதிரி அதிக நேரத்தை குடிப்பதில்லை. நமக்குத் தெரிந்த மற்றும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் மட்டும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவியாக இருக்கிறது.
தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எங்கும் இல்லாத நிலையை வாட்ஸ்ஆப் உருவாக்கியுள்ளது.

ஆனால் யாருக்கு தெரியும் எது எந்த நேரத்தில் எப்படி நடக்கும் என்று? எட்டு வருடத்திற்கு முன் நமக்கு தெரியுமா இன்று வாட்ஸ்ஆப் உபயோகிப்பாளர்கள் 100 கோடி பேர் ஆவார்கள் என்று. அது போல பின்னாளில் இது போல ஒரு அப்ளிகேஷன் வரலாம் வாட்ஸ்ஆப் ஐ வெற்றி பெறவும் செய்யலாம்.


அது அவ்வளவு சாத்தியமில்லை அதற்கு அவர்கள் இவ்விருவரை தாண்டி ஓட விரும்பினால் இவர்களை தாண்டி இரண்டு மடங்கு ஓட வேண்டும். இன்றைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. என்றாலும் பார்போம் எது எந்த நேரத்திலும் எப்படியும் மாறும் அல்லவா?

நன்றி மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்..!

No comments:

Post a Comment

AdSense-03